இன்று திருவள்ளூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் அவர்கள் தமிழக முதலமைச்சரிடம் வருகின்ற நிதி ஆய்வுக் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தேவைகளை குறித்து நாளைக்கு கொடுக்க உள்ளதால் அனைத்து அமைப்புகளும் சேர்ந்து வசந்தம் முன்னிலையில் இன்று கோரிக்கை வைக்கப்பட்டது1. உதவித்தொகை 5000 பாதுகாவலர்களுக்கு 4000 2. வங்கி கடன் மானியம் 50,000 மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தின் மூலம் வழங்க வேண்டும் 3. அரசு கொடுக்கின்ற வீடு முழு செலவையும் அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் 4.  தையல் எந்திரம் வழங்குவது போல் மாவு அரைக்கும் மிஷின் பாதுகாவலர்களுக்கு வழங்க வேண்டும் 5.தொடர்ந்து மாற்றுத்திறனாளிக்கு 100 நாள் வேலை கிடைக்க நிதி ஒதுக்கிட வேண்டும் 6.ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கு இலவசமாக கழிவறை கட்டித் தர வேண்டும் 7. அனைத்து மாற்றுத் திறனாளிகள் வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் 9.CP.MR.MI போன்ற மாற்றுத்திறனாளிகள் தனியார் நிறுவனங்களில் வாங்குகின்ற மருந்து செலவு அரசு தொகையாக வழங்க வேண்டும் 10. ஒரு நாளைக்கு 200 விதம் 15 நாளைக்கு 3000 பெட்ரோல் நிதியாக வழங்க வேண்டும் 11. முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தினந்தோறும் அவர்கள் வாங்கக்கூடிய பொருட்கள் அரசு நிதியாக வழங்க வேண்டும்